sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர் மட்டம் குறைவால் வைகை அணையில் மீன்கள் வரத்தும் குறைவு

 நீர் மட்டம் குறைவால் வைகை அணையில் மீன்கள் வரத்தும் குறைவு

 நீர் மட்டம் குறைவால் வைகை அணையில் மீன்கள் வரத்தும் குறைவு


ADDED : பிப் 18, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் பிடிபடும் மீன்களின் அளவும் குறைகிறது.

வைகை அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் பிடித்தலுக்கான உரிமம் தற்போது தனியார் வசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பல லட்சம் எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும். சில மாதங்களில் 2 முதல் 5 கிலோ அளவு பெரிதாக வளர்ந்து விடும். தினமும் 20க்கும் மேற்பட்ட பரிசல்களில் சென்று மீனவர்கள் மீன் பிடித்து ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து அதற்கான சம்பளம் பெற்றுக்கொள்கின்றனர். பிடிக்கப்படும் மீன்கள் வைகை அணை நீர்த்தேக்க பகுதியிலேயே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள், வியாபாரிகள் அதிகரித்துள்ளனர். மீன்கள் வரத்து குறைவால் வியாபாரிகள் கூடுதலாக வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

மீனவர்கள் கூறியதாவது: வைகை அணை நீர்த்தேக்கத்தில் கட்லா, மிருகால் ரோகு, ஆறா, சொட்டைவாளை, ஜிலேபி வகை மீன்கள் உள்ளன.

தற்போது அணை நீர்மட்டம் 44 அடி வரை குறைந்துவிட்டது. (அணை மொத்த உயரம் ௭௧ அடி) மீன்கள் தொடர்ந்து பிடிக்கப்படுவதால் மீன்கள் பெருக்கம் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் குறைகிறது. தற்போது தினமும் 500 கிலோ அளவிலான மீன்கள் வரத்து உள்ளது. வைகை அணை மீன்கள் சுவை அதிகம் என்பதால் உடனுக்குடன் விற்பனை ஆகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us