/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'இ----நாம்' முறையில் 6 டன் மக்காச்சோளம் ஏலம் கிலோ ரூ.21.30க்கு விற்பனை

ADDED : நவ 14, 2025 05:04 AM
தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ நாம் முறையில் 6 டன் மக்காச்சோளம் கிலோ ரூ. 21.30 என்ற விலையில் ஏலம் சென்றது.
வேளாண் விற்பனை குழு சார்பில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு வேளாண் விளை பொருட்கள் இ நாம் எனப்படும் முறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இநாம் முறையில் கொப்பரை, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து வகை தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்கின்றனர். தேனி வேளாண் விற்பனை கூடத்திற்கு நேற்று 6040 கிலோ மக்காச்சோளம் விற்பனைக்கு வந்தது.
இநாம் ஏலத்தில் 9 வியாபாரிகள் பங்கேற்றனர். மக்காச்சோளம் கிலோ ரூ. 21.30க்கு ஏலம் போனது.
வியாபாரிகள் தங்கள் விளை பொருட்கள் இநாம் முறையில் விற்பனை செய்ய தேனியில் பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம். அல்லது 99766 30746 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.