/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்ச்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
/
சர்ச்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : ஏப் 21, 2025 06:46 AM
தேனி: இயேசு சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதனை 'உயிர்ப்பு ஞாயிறு' அதாவது ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சர்ச்சுகளில் அதிகாலை, காலை என இருமுறை திருப்பலிகள் நடந்தது.
தேனி
பங்களாமேடு உலக மீட்பர் சர்ச்சில் பாதிரியார் முத்து தலைமையில் திருப்பலி நடந்தது.
உதவி பாதிரியார்கள் சின்னப்பன், இருதயராஜ் முன்னிலை வகித்தனர். இதில் தேனி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, ஊஞ்சாம்பட்டி, அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
தேனி நகர் சி.எஸ்.ஐ., துாய பவுல் சர்ச்சில் பாதிரியார் அஜித்ஸ்டேன்லி திருப்பலி நிறைவேற்றினார். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்றனர்.
பெரியகுளம்
தென்கரை புனித அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் சகாயராஜ் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
மாலையில் சர்ச்சில் துவங்கிய சப்பர ஊர்வலம் தென்கரை, வடகரை பகுதி வழியாக சென்று இரவில் சர்ச்சிற்கு வந்தது. வழி நெடுகிலும் பொது மக்கள் இயேசுவை பிரார்த்தனை செய்தனர்.
வடகரை கோட்டை மேடு சி.எஸ்.ஐ., சர்ச்சில் பாதிரியார் ஸ்டாலின் பிரபாகரன் திருப்பலி வழிபாடு நடத்தினார். ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
தாமரைக்குளம், லட்சுமிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சர்ச்சில் திருப்பலி பிரார்த்தனைகள் நடந்தன.--

