ADDED : அக் 11, 2025 04:51 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மேரிமாதா கலை,அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் வழங்கும் முகாம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம், துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் 21 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2.47 கோடி கடனுதவி வழங்கினார். கலெக்டர் கூறுகையில்,' உயர் கல்வி படிப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது. அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால், கல்விக் கடன் திட்டங்கள்,வட்டி சலுகை, திருப்பி செலுத்தும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, வெற்றியாளராக உருவாக வேண்டும்', என்றார். முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், தாசில்தார் மருதுபாண்டி, அனைத்து வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.