UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:45 PM
போடி: போடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து செட்டியார்கள் சங்கம் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா நடந்தது.
சங்கத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். பொருளாளர் சரவணக் குமார், துணைத் தலைவர்கள் பாண்டியராஜ், ராஜேஷ் கண்ணன், விஜய குமார், ஆலோசகர் ரமேஷ், வழக்கறிஞர் பாலமுரளி முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை முன்னாள் நகராட்சித் தலைவர் பழனிராஜ், சந்தியாஸ் மகால் உரிமையாளர் சம்பத், த.வெ.க., பிரமுகர் ஆரோசெல்வம் துவக்கி வைத்தனர். போடி சி.பி.ஏ., கல்லூரி தலைவர் ராமநாதன், செயலாளர் புருசோத்தமன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரி, கவுன்சிலர் கலையரசி குத்து விளக்கு ஏற்றினர். டாக்டர் சதீஷ் குமார், செந்தில்குமரன் பேசினர்.
10, பிளஸ் 2 ம் அரசு பொதுத்தேர்வு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி டெக்னிகல் லீடர் இயக்குனர் வேலர், வி தீ லீடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் அப்பாரு, வர்த்தக் சங்கத் தலைவர் வேல்முருகன், செயலாளர் சண்முகம், டாக்டர் கவுரிசங்கர் பரிகள் வழங்கினர். விழாவில் அனைத்து செட்டியார் உட்பிரிவுகளின் தலைவர், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
