/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
/
பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ADDED : ஏப் 13, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் நடந்தது.
ஓய்வு ஆசிரியர் முனைவர் பிலிப்ஸ் வாழ்த்தி பேசினார். கல்வி வளர்ச்சி நாள், சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மண் பாண்டங்கள் உருவாக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி தமயந்தி, முதல்வர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர். பரிசுகள் வழங்கப்பட்டன.

