ADDED : ஏப் 11, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டு அளிப்பது கட்டாயம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் வேலப்பர் கோயில், கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, உப்புத்துறை, தாழையூத்து, போடி, மேலப்பரவு, சோலையூர், சிறைக்காடு ஆகிய கிராமங்களில் 'ஓட்டு எனது உரிமை' என்பதை வலியுறுத்தியும், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ரஞ்சித் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்ட பணியாளர் முத்துப்பாண்டி ஏற்பாடு செய்தனர்.
