ADDED : மார் 25, 2026 04:55 PM

அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத ஓட்டுப்பதிவு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் திராட்சை வடிவிலான விழிப்புணர்வு 'லோகோ' லட்சினை மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித் சிங் வெளியிட்டார். அவருடன் டி.ஆர்.ஓ. ராஜகுமார், பிற தொகுதி தேர்தல் அலுவலர்கள் ரஜத் பீடன், கவிதா, நல்லையா, சையத் முகைதீன் இப்ராஹிம், பி.ஆர்.ஓ. எடிசன், உதவி தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
