ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 22, 2026 08:32 PM

பெரியகுளம்:பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு சாவடிக்கு அனுப்பப்பட்டது.
பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதியில் 360 ஓட்டு சாவடிகள் உள்ளன. சட்டசபை தேர்தலுக்காக 360 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கூடுதலாக 70 என 430 பேலட் யூனிட்கள், கன்ட்ரோல் யூனிட், வி.வி., பேட் 466 ஆகியவை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத்பீடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டின் 'சீல்' அகற்றப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பார்வையாளர் பீம்சிங் மேற்பார்வையிட்டார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் லாரிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவிற்கு தேவையான விரலில் வைக்கும் மை, பேனா, பென்சில்,
அலைபேசி பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது. ஒவ்வொரு லாரியிலும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு சென்றனர்.
--
