/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
/
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
ADDED : டிச 28, 2025 05:41 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு நடந்தது.
இம்மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.9ல் நடந்தது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிச.21ல் பதவி பிரமாணம் நடந்தது. மாவட்டத்தில் 52 ஊராட்சிகள், 8 ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி ஆகியவற்றிற்கு தலைவர், துணைத் தலைவர் தேர்வு நேற்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வசம் உள்ள மாவட்ட ஊராட்சியில் கேரள காங்கிரஸ் (ஜோசப்) பிரிவைச் சேர்ந்த ஷீலாஸ்டீபன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மூணாறு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் விஜயகுமார், இடதுசாரி கூட்டணி சார்பில் சிவகுமார் போட்டியிட்டனர். 14 ஓட்டுகள் பெற்று விஜயகுமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரசை சேர்ந்த லெட்சுமி துணைத் தலைவரானார்.
இடது சாரி கூட்டணி வசம் உள்ள தேவிகுளம் ஊராட்சியில் தலைவர் சரண்யா (இந்திய கம்யூ), துணைத் தலைவர் சரத்சந்திரன் ( மார்க்சிஸ்ட் கம்யூ.,) சேர்ந்த சரத்சந்திரன் ஆகியோர், அதே கூட்டணி வசம் உள்ள வட்ட வடை ஊராட்சியில் தலைவர் சூர்யராஜ் (இந்திய கம்யூ) , துணைத்தலைவர் மாலா (மார்க்சிஸ்ட் கம்யூ) ஆகியோர்,
இதே கூட்டணி வசம் உள்ள மலைவாழ் மக்களுக்கான இடமலைகுடி ஊராட்சியில் தலைவர் பினு, துணைத் தலைவர் பரிமளாதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்தவர்கள்.
பள்ளிவாசல் ஊராட்சியில் காங்கிரஸ், இடது சாரி கூட்டணி தலா 7 வார்டுகள் வீதம் வெற்றி பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் மாயா (காங்கிரஸ்), துணைத் தலைவர் பவுன்தாய் (இந்திய கம்யூ) தேர்வு செய்யப்பட்டனர்.
தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் தலைவர் ராஜேஸ்வரி (இந்திய கம்யூ), துணைத்தலைவர் அனீஷ் பி.கிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ) தேர்வு செய்யப்பட்டனர்.

