ADDED : மார் 06, 2026 06:08 AM
தேனி: தேனியில் நகராட்சிகூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற தீர்மானத்திற்கு பலர் ஆதரவு அளித்தும்தேர்தல் நெருங்குவதால் ஆக்கிரமிப்புகள்அகற்றும் பணி முடங்கியது.
தேனி நகர்பகுதியில் நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 4 மாதங்களுக்கு முன் நடந்த நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால்,கூட்டத்தில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த பல கவுன்சிலர்களும் களத்தில் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
இதனால் நகராட்சியின் பல பகுதிகளில் ரோடுகள் சுருங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விபத்துக்களும் அதிகரிக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ரோட்டில் ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மக்கள் எதிராக திரும்பி விடுவார்கள் என்றும், அதனால் தேர்தல் முடிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என சிலர் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளும் வைத்துள்ள னர்.
