ADDED : மார் 28, 2026 10:20 PM
தேனி;தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனியில் 1394 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 6692 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டிபட்டி தொகுதிக்கு வேளாங்கன்னி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் தொகுதிக்கு வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியிலும், போடி தொகுதிக்கு வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கம்பம் தொகுதிக்கு ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியிலும் பயிற்சி நடைபெற்றது.
கம்பத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு 145 அலுவலர்கள் வரவில்லை. ஓட்டுப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் இயக்குதல், ஓட்டுப்பதிவு மையத்தில் செய்ய வேண்டிய முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தன. அதனை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர்கள் ரஜத்பீடன், கவிதா, நாகேந்திரன், உதவி தேர்தல் அலுவலர்கள் ஜாஹிர் உசேன், மருதுபாண்டி உடன் இருந்தனர்.
