ADDED : பிப் 05, 2026 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு நிதி திட்டத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் மின் மயானம் அமைக்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடந்து வந்த பணி சமீபத்தில் முடிந்தது.
பூஞ்சோலை அறக்கட்டளை சார்பில் மின் மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் பூஞ்சோலை அறக்கட்டளை தலைவர் சரவணன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர் பகவதி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இறந்த உடல்களை மின் மயானத்தில் எரிப்பதற்கான விதிமுறைகள் கட்டணம் குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

