ADDED : ஏப் 30, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி பஸ்ஸ்டாண்ட் தெருவைச் சேர்ந்த சின்னமுத்து, பழனியம்மாள் இவர்களது மகன் ஹரிபிரசாத் 26. சில ஆண்டுகளுக்கு முன் சின்னமுத்து இறந்தார்.
சின்னமனூர் மின்துறை வணிக உதவியாளராக ஹரிபிரசாத் பணி புரிந்து வந்தார். திருமணமாகவில்லை. ஏப்.21ல் போடியில் தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக சென்ற ஹரிபிரசாத் வீடு திரும்பவில்லை. பழனியம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

