UPDATED : ஜூன் 20, 2026 09:57 PM
ADDED : ஜூன் 20, 2026 09:41 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனியில் அல்லிநகரம், பாரஸ்ட் ரோடு, பொம்மையகவுன்டன்பட்டி பகுதிகளில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. அவற்றை நகராட்சி துாய்மை பணியாளர்கள் சேகரிப்பதற்கு தாமதம் ஆகிறது. இதனால் அப்பகுதியினர் சிலர் குப்பைக்கு தீ வைக்கின்றனர்.
குறிப்பாக மின் டிரான்ஸ்பார்மர்கள் அருகே குப்பைக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை மின்துறை அதிகாரிகள் கண்டிக்கின்றனர்.இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைக்கு தீ வைக்க கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மின்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
