/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 30, 2025 05:59 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஆண்டிபட்டி வழியாக செல்கிறது. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை ஒன்றரை கி.மீ., தூரம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குடியிருப்புகள் கடைகள் உள்ளன.
தேசியநெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள், தகர ெஷட்டுகள் அமைத்து பலரும் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமானது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பலரும் வலியுறுத்தியதை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு கோர்ட் மூலம் சிலர் தற்காலிக தடை உத்தரவு பெற்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம், போலீசாரின் தொடர் நடவடிக்கையால் நேற்று மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
ஆண்டிபட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதும் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பதும் பல ஆண்டுகளாக தொடர் கதையாக உள்ளது.
அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், ரோட்டின் ஓரங்களில் பொதுமக்களுக்கு நடை பாதை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை தர வேண்டும்.

