/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தேனியில் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 08, 2025 06:12 AM
தேனி: தேனி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு சிரமங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் நகர் பகுதி, குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து அகற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பற்றி எந்த முன்னெடுப்பும் இன்றி காணப்பட்டது.
இதுபற்றி நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் சிலர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வந்தோம்.
அதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்காமல் இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிய உள்ளன. விரைவில் அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றி உள்ள பகுதிகளில் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை துவங்க உள்ளோம்., என்றனர்.

