ADDED : மார் 03, 2024 06:21 AM

தேனி,: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார்.கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சென்னை வெப்பிராக்ஸ், வின்டாரிக்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் ராஜேஷ்கண்ணா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் இலக்கு வைத்து தொடர் முயற்சிகள் செய்தால் முன்னேற்றம் காணலாம். தாங்களாகவே முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழுவாக இணைந்து செயல்பட பழக வேண்டும். சுதந்திரமாக செயல்பட ஆதரவு அளிக்க வேண்டும். இன்றயை சூழலில் மாணவர்கள் எதனையும் சந்திக்கும் திறமை படைத்தவர்கள்,'' என்றார்.
விழாவில் பல்கலை அளவில் 2ம் பிடித்த முதுநிலை மாணவி ஜோஸ்விகாவிற்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் கல்லுாரி இணைச்செயலாளர் விஜயன், கல்லுாரி முதல்வர் சீனிவாசராகன், பொரளாளர் ராதாகிருஷ்ணன், கம்மவார் சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள் நம்பெருமாள், பொன்னுசாமி, இணைச்செயலாளர் ராஜமன்னார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
