ADDED : ஜன 30, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகம் அருகே பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர்களுக்கு 7 வதுஊதியக்குழு ஊதிய பயன்பாட்டை நிறைவேற்றிட வேண்டும், அரசு பொறியியல் துறைகளை மேம்படுத்த பொறியியல் சீராய்வு குழு அமைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியான பொறியாளர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும் என்பதை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

