UPDATED : அக் 12, 2026 04:47 PM
ADDED : அக் 12, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி நகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் முன்னிலை வகித்தார். டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், தண்ணீர் தேங்காதவாறு சுற்றுப்புறங்களை பராமரித்தல், குப்பையை பிரித்து வழங்குதல் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
