UPDATED : ஜூன் 03, 2026 08:44 PM
ADDED : ஜூன் 03, 2026 08:23 PM
தேனி:தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஜூன் 3 முதல் ஜூன் 30 வரை திண்டுக்கலில் உள்ள தமிழக தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகத்தில் நடக்கிறது. கிளை அலுவலகம் திண்டுக்கலில் காட்டாஸ்பத்திரி பாண்டியன் நகர் முதல் தெருவில் உள்ளது.
புதிதாக சிறுகுறு தொழில் முனைவோர், நிறுவனங்களை விரிவு படுத்துபவர்கள், உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசு திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல், தேனியை சேர்ந்தவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ.93 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 25 முதல் 35 சதவீதம் வரை முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படும். இம்முகாமில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆய்வு கட்டணம் கிடையாது. மேலும் விபரங்களுக்கு 99626 22939 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
