ADDED : மார் 05, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் முதற்கட்டமாக 10 வார்டுகளில் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 42 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி முன்னிலையில், நகராட்சித் தலைவர் பத்மாவதி வழங்கினார். உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி மேற்பார்வையாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் விவேக், கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

