ADDED : ஆக 21, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.22–தேனி அன்னஞ்சியில் மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூமிநாதன், சரவணன் முன்னிலை வகித்தனர். கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக பிரதிநிதித்துவமான 7.18 சதவீதம் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பை முறைப்படுத்த வேண்டும், மேகதாது அணை அமைக்க த.வெ.க., அரசு அனுமதிக்க கூடாது உள்ளிட்ட5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
