UPDATED : அக் 19, 2026 05:26 PM
ADDED : அக் 19, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அப்பாஸ்மந்திரி முன்னிலை வகித்தனர். செயலாளர் சியாப்தீன் வரவேற்றார். மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வினியோகிக்கப்படுகிப்பதை ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரத் துணைத் தலைவர் கமருல்ஜமான், பொருளாளர் காதர்மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
