ADDED : மார் 24, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கேரளா குமுளியில் சட்டசபை தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆசிஸ்குமார் ஆய்வு செய்தார்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் ஏப். 9ல் நடைபெறுகிறது. தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆசிஸ்குமார் நேற்று கேரளா குமுளியில் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினருடன் கண்காணிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தேர்தல் விதிமுறைகள் மீறிய சம்பவம் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
