/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் களத்தில் விவசாயி வெட்டிக்கொலை: டூவீலரில் சென்ற மர்ம நபர்கள் ஆத்திரம்
/
நெல் களத்தில் விவசாயி வெட்டிக்கொலை: டூவீலரில் சென்ற மர்ம நபர்கள் ஆத்திரம்
நெல் களத்தில் விவசாயி வெட்டிக்கொலை: டூவீலரில் சென்ற மர்ம நபர்கள் ஆத்திரம்
நெல் களத்தில் விவசாயி வெட்டிக்கொலை: டூவீலரில் சென்ற மர்ம நபர்கள் ஆத்திரம்
ADDED : நவ 11, 2025 11:41 PM

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே சீலையம்பட்டியில் நெல் களத்திற்கு சென்ற விவசாயி பால்பாண்டியனை 60, டூவீலரில் ெஹல்மெட் அணிந்து சென்ற மர்ம நபர்கள் அதிகாலையில் வெட்டிக் கொலை செய்து தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டியன். இவர் சீலையம்பட்டியில் 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தார். நேற்று முன்தினம் அறுவடை செய்த நெல்லை மேலப்பூலானந்தபுரம் ரோட்டில் விற்பனைக்காக குவித்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து நெல் களத்திற்கு சென்றார். அப்போது எதிர் திசையில் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் அரிவாளால் பால்பாண்டியனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி விட்டனர். கொலை நடந்த இடம் அருகே பூக்கடைகள் இருந்தன. கடைகளை திறக்க வந்தவர்கள் பால்பாண்டியன் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பால்பாண்டியன் கொலையானதை அறிந்த உறவினர்கள் சீலையம்பட்டி ரோட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி-கம்பம் இடையே இயங்கிய வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. டி.எஸ்.பி., சுனில் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதையடுத்து போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர்.
கொலைக்கான காரணம் என்ன:
கொலையான பால்பாண்டியன் ஒரு சமுதாயத்தின் தலைவராக இருந்துள்ளார். அந்த சமுதாயத்தில் இரு கோஷ்டிகளாக பிரிந்து முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். தற்போதும் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். நான்காண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினர் மீதும் சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மோதல் தொடர்ச்சியாக இக்கொலை நடந்ததா அல்லது பால்பாண்டிக்கு வேறு எதிரிகள் உள்ளனரா என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சின்னமனுார் போலீசார் கைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

