sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 யானைகள் சேதப்படுத்திய தென்னை மரத்திற்கு இழப்பீடு குறைத்து வழங்குவதால் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

/

 யானைகள் சேதப்படுத்திய தென்னை மரத்திற்கு இழப்பீடு குறைத்து வழங்குவதால் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

 யானைகள் சேதப்படுத்திய தென்னை மரத்திற்கு இழப்பீடு குறைத்து வழங்குவதால் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

 யானைகள் சேதப்படுத்திய தென்னை மரத்திற்கு இழப்பீடு குறைத்து வழங்குவதால் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்


ADDED : டிச 06, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கடமலைக்குண்டு அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்த நிலையில் ஒரு மரத்திற்கு இழப்பீடு ரூ.500 வழங்குவதால் பாதிக்கப்படுகிறோம். இழப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ஸ்ரீவில்லிப்புத்துார் - மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் உதவி வன பாதுகாவலர் சாய்சரண்ரெட்டி தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா, மேகமலை புலிகள் காப்பகத்தின் வனச்சரகர்கள் திருமுருகன், சிவாஜி,பிச்சைமணி, பிரபாகரன், பாலமுருகன், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: நாகராஜ் சி.பி.எம்., : புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேகமலையில் 1595 பேர் ஆக்கிரமித்துள்ளதாகநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உதவி வன பாதுகாவலர்: இது வதந்தி. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் வனத்துறை மட்டும் ஆக்கிரமிப்பு அகற்ற முடியாது. வருவாய்த்துறை, போலீசார் என பிறத்துறையும் இணைந்துதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

கென்னடி, மலைமாடுகள் வளர்ப்போர் நல சங்கம்: மேய்ச்சல் நில உரிமையை வனத்துறை வழங்கலாம் என வன உரிமை சட்டத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை கண்டு கொள்வது இல்லை. உதவி வன பாதுகாவலர்: வனத்துறை மேய்ச்சல் நிலம் வழங்க எந்த சட்டத்திலும் கூற வில்லை. மேய்ச்சல் தரிசு நிலங்களை தேர்வு செய்வது மாவட்ட நிர்வாகமும்,கால்நடைதுறையும்.விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேல்முருகன், மாவட்டச் செயலாளர்: கடமலைக்குண்டு ஊராட்சி மேலப்பட்டியில் 5000 தென்னை மரங்களை யானைகள் வந்து சேதம் செய்துள்ளது. ஒரு மரத்திற்கு நிவாரணத் தொகை ரூ.500 மட்டுமே கிடைக்கிறது. ஐந்தாண்டுகள் அதனை வளர்ப்பதற்கு ஒரு மரத்திற்கு 15 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்கிறோம். இழப்பீட்டுத் தொகை ஒரு மரத்திற்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். அறிவழகன், விவசாயி, மேலப்பட்டி: எனது மூன்றரை ஏக்கரில் உள்ள 96 தென்னை மரங்களை யானை சேதப்படுத்திவிட்டது. சோலார் வேலி, அகழி வெட்ட வேண்டும்.

உதவி வனபாதுகாவலர்: பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டியன், மாவட்ட விவசாயிகள் சங்கம்: சோலார் பாதுகாப்பு வேலி சிறந்த பயனளிக்கும். இதற்கு முன் வனத்துறை நடவடிக்கைகள் எடுத்ததால் பயிர்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதவி வனபாதுகாவலர்: அளவீட்டுப் பணிகள் முடிந்து, நிதி வழங்க முதன்மை வன பாதுகாவலர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்ததும் பணிகள் முடிக்கப்படும்.






      Dinamalar
      Follow us