ADDED : நவ 27, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வேளாண் விளை பொருட்களை அரசு கொள் முதல் செய்ய வேண்டும். நெல்லுக்கு ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி முருகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜப்பன், குணசேகரன், சங்கரசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

