ADDED : மே 16, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வடவீரநாயக்கன்பட்டியை சுற்றி உள்ள 5 கிராமத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே சமத்துவ அம்பேத்கர் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிசாமி, ஐயப்பன், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.