நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூ.,சார்பில் டாக்சி ஸ்டாண்ட் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தேனி மாவட்டம் முழுவதும் குடியிருக்க வீடு இல்லாத ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். பல மாதமாகியும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபால் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மதுரை மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு வீரபாலன் உட்பட பலர் பேசினர்.

