தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் அச்சம்

ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் அச்சம்

ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் அச்சம்


UPDATED : ஜூன் 18, 2026 05:35 PM

ADDED : ஜூன் 18, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 05:35 PM ADDED : ஜூன் 18, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் பார்க்கிங்கில் திருட்டு அபாயம் உள்ளதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.

தேனி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள வாகன நிறுத்தத்தில் டூவீலர் திருட்டு அபாயம் உள்ளது. தினமும் காலையில் மதுரை, சென்னையில் இருந்து தலா ஒரு ரயில்கள் வருகின்றன. அவை மாலையில் தேனி வழியாக மதுரை, சென்னைக்கு செல்கின்றன. தேனி மக்கள் பலரும் இவ்விரு ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகன நிறுத்தம் உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் ஏதும் இல்லை. மேலும் இரவு 9.15 மணிக்கு சென்னை செல்லும் கடைசி ரயில் சென்றபின் டூவீலர்களுக்கு பாதுகாப்பிற்கு யாரும் இல்லை. இதனால் டூவீலர் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக ரயில் பயணிகள் கூறுகின்றனர்.இதுபற்றி தினசரி ரயில் பயணி பீரவீன் கூறுகையில், 'நான் வாரத்தில் 3 நாட்கள் தேனி-மதுரை ரயிலை பயன்படுத்துகிறேன். இதற்காக தேனி ரயில்வே ஸ்டேஷனில் டூவீலரை நிறுத்தி செல்கிறேன். வாகன காப்பகத்திற்கு சுற்றுச்சுவரோ, கண்காணிப்பு கேமராவோ, காவலாளியோ இல்லை. இதனால் டூவீலர்களை நிறுத்த அச்சமாக உள்ளது. வாகன நிறுத்தத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us