தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பட்டுப்போன மரத்தால் அச்சம்

 பட்டுப்போன மரத்தால் அச்சம்

 பட்டுப்போன மரத்தால் அச்சம்


ADDED : செப் 19, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி என்.ஆர்.டி., நகர் மின்வாரிய அலுவலகம் அருகே காய்ந்து பட்டுப்போன மரம் ஒன்று கீழே விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

நகரின் முக்கிய ரோடானா என்.ஆர்.டி., நகர் ரோட்டில் தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என பலரும் பயன்படுத்துகின்றனர். மின் வாரிய அலுவலகம் அருகே பட்டுப்போன காய்ந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், '3 மாதங்கள் முன்பு மரம் பட்டுப்போனது. அவ்வப்போது காய்ந்த மரக்கிளை விழுந்து வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். நகராட்சி ஊழியர்களிடம் கூறினால் மரத்தை வெட்டாமல் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். மரம் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us