UPDATED : நவ 24, 2026 06:37 PM
ADDED : நவ 24, 2026 06:30 PM

மூணாறு: இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை, சேரியாறில் தனியாக வசித்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி நாயக்தபேதாரை 27, போலீசார் கைது செய்தனர்.
சேரியாறில் தனியாக வசித்த ராணி 56, வீட்டின் அருகே நடைபாதையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சாந்தாம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேவிகுளம் இன்ஸ்பெக்டர் கவிராஜன் விசாரித்து வந்தனர். கொலைசம்பவத்தில் தொடர்புடைய மேற்கு வங்கம் மாநிலம் பர்தமான் ராய்கிராம் பகுதியை சேர்ந்த நாயக்தபேதாரை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு டி.எஸ்.பி., அமிர்தாசதீபன் கூறுகையில்., சேரியாறு ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்த நாயக் தபேதார், ராணியிடம் பணம் வாங்கியுள்ளார். அதனை திரும்ப கேட்டதால் ராணியை கொலை செய்து சொந்த ஊர் தப்பினார். அவரது அலைபேசி எண்ணை கண்காணித்து மேற்கு வங்கம் சீல்டா ரயில் நிலையத்தில் நாயக்தபேதார் கைது செய்து, கேரளாவுக்கு அழைத்து வந்ததாக கூறினார்.
