ADDED : மார் 19, 2024 05:49 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமாரி 42. இவருக்கும் சின்னமனுார் காந்திநகரை சேர்ந்த முருக பூபதிக்கும் 1997ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடினால் எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
ஒன்றரை ஆண்டுகளாக பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் தனது அண்ணன் நவநீதகுமார் 45. பராமரிப்பில் செந்தில்குமாரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தினார்.
இந்நிலையில் மனவேதனையில் விஷம் குடித்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு செந்தில்குமாரி கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
