தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காய்ச்சல்,சளி தொந்தரவு சித்தா டாக்டர் ஆலோசனை

 காய்ச்சல்,சளி தொந்தரவு சித்தா டாக்டர் ஆலோசனை

 காய்ச்சல்,சளி தொந்தரவு சித்தா டாக்டர் ஆலோசனை


ADDED : நவ 30, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனியுடன் மழையும் பெய்வதால் காய்ச்சல், சளி பரவி வருகிறது. இதை தடுக்க மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில நாட்களாக பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் காய்ச்சல், சளியால்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு சீதோஷ்ண நிலை உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களை கை கால்களை முடக்கும் நிலை எழுந்துள்ளது. வயதான முதியவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் , தனியார் கிளினிக்குகளிலும் சிகிச்சைக்கு வருவோர் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்று காமயகவுண்டன்பட்டி சித்தா டாக்டர் சிராசுதீன் கூறியதாவது: சீதோஷ்ண நிலை மோசமாக உள்ளது. முதலில் குடிதண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சாப்பிடும் உணவுகளை சுடச் சுட உண்ண வேண்டும். மிளகு, திப்பிலி, சுக்கு பொடிகளை தேனில் கலந்து சாப்பிடலாம். அதிமதுர டீ குடிக்கலாம். நிலவேம்பு, கபசுர குடிநீர் கஷாயங்களை குடிக்கலாம். ஆடாதொடை இலைகளை மிளகு சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். நொச்சி இலையில் ஆவி பிடிப்பதும் சிறந்தது. -வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டும் என்றால் தலை, உடம்பு நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us