UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் சசீதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் உள்ளிட்டோர் ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டர்.
சில ஓட்டல்களில் சமைத்த இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த, குளிர்சாதன பெட்டியில் உணவு வைத்திருந்த 4 ஓட்டல்களுக்கு மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.உணவுப்பாதுகாப்புத்துறையினர் கூறுகையில்,‘சுகாதாரமற்ற முறையில் தயாரித்து உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் உணவுப்பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 என்ற எண்ணிற்கு புகார் அனுப்பலாம்,’ என்றனர்.
