UPDATED : செப் 26, 2026 07:37 PM
ADDED : செப் 26, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
கம்பம்:கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு குமுளி ரோட்டில் உள்ளது. நாள் தோறும் 10 டன்னுக்கு மேல் குப்பை சேகரமாவதால் குப்பை கிடங்கு நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக இருந்தது. நகராட்சி அதிகாரிகள் தகவலின் பேரில் கம்பம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போல குப்பை கிடங்கில் தீப் பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.
