UPDATED : ஜூன் 03, 2026 08:58 PM
ADDED : ஜூன் 03, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறில், பழைய மூணாறில் மூலக்கடை பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் நேற்று மதியம் ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12:00 மணியளவில் சமையல் அறையில் திடிரென தீப்பற்றியது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சமையல் அறையை விட்டு வெளியேறினர்.
பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். மூணாறு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திலற்கு வந்தனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆய்வில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது தெரியவந்தது.
