ADDED : செப் 11, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, செப். 12-
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் 50. திருமணம் உட்பட சுபநிகழ்ச்சிகளுக்கு டெக்கரேசன் தொழில் செய்து வருகிறார். வீட்டருகே சாமியானா உட்பட அலங்கார பொருட்களை தகர செட் அமைத்து வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அலங்கார பொருட்கள் முழுவதும் சேதமானது. தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
--
