/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீயணைப்புத்துறை செயல் விளக்க பயிற்சி
/
தீயணைப்புத்துறை செயல் விளக்க பயிற்சி
ADDED : அக் 27, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அருகே நாகலாபுரம் பாரத் வித்யா மந்திர் பள்ளியில் தேனி தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்,தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த செயல்விளக்க ஒத்திகை பயிற்சி நடந்தது.
தேனி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி, நிலைய அலுவலர் போக்குவரத்து நாகராஜ், பணியாளர்கள் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு பருவமழை காலமீட்புப் பணிகள் குறித்து செயல் முறை விளக்கம் நடந்தது. பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.