ADDED : அக் 31, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கவுமாரி எலக்ட்ரானிக்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் குடோன் உள்ளது.
இங்கு நேற்று பழைய பொருட்கள் வைக்கப்பட்ட இடத்தில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது.
தேனி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜெயராணி, நாகராஜ் ஆகியோர் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

