தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தீ தடுப்பு விழிப்புணர்வு

 தீ தடுப்பு விழிப்புணர்வு

 தீ தடுப்பு விழிப்புணர்வு


ADDED : பிப் 23, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கோடை காலம் நெருங்குவதால் வனப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம் வனச்சரகம் சார்பில் அகமலை, சோத்துப்பாறை கிராமங்களில் ரேஞ்சர் ஆதிரை தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம மக்களிடம் காட்டு தீ ஏற்படுவதன் காரணம், அதனை தடுப்பது பற்றி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வனவர் தனபாலன், வனக்காப்பாளர்கள், பெரியகுளம் எட்வர்ட் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆண்டிப்பட்டி ரேஞ்சர் அருள்குமார் தலைமையிலான குழுவினர் சித்தயகவுண்டன்பட்டி ,மேக்கிலார்பட்டி பகுதிகளில் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காட்டுத் தீயை அணைப்பது பற்றி விளக்கினர். ரேஞ்சர் கூறுகையில், ஆண்டிபட்டி வனப்பகுதியில் 6 மீட்டர் அகலத்தில் 5 கிலோ மீட்டரும், 3 மீட்டர் அகலத்தில் 15 கிலோ மீட்டருக்கும் தீ தடுப்பு கோடுகள் அமைத்துள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us