/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காவலாளிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி
/
காவலாளிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி
ADDED : பிப் 10, 2026 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தீயணைப்புத்துறை சார்பில் தனியார் நிறுவன காவலாளிகளுக்கு தீத்தடுப்பு, அடிப்படை தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனியில் லைப் இன்னவேஷன் பள்ளியில் நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சமையல் காஸ் சிலிண்டர் தீப்பிடித்தால் அதனை எப்படி அணைக்க வேண்டும்.
அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்டவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
பங்கேற்ற காவலாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. தேனி தீயணைப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

