/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
/
இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
ADDED : பிப் 08, 2026 06:07 AM

தேனி: மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., களுக்கு கைத்துப்பாக்கி கையாளுதல், புத்தாக்க பயிற்சி வகுப்புகள் சப்டிவிஷன் வாரியாக துவங்கி நடந்து வருகிறது.
போலீசார் கூறியதாவது: போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களுக்கு அரசு வழங்கிய உள்ள கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை கையாள்வது பற்றிய பயிற்சி பிப்.,4ல் துவங்கியது. தினமும் ஒரு சப்டிவிஷன் வாரியாக இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மற்றொரு மாவட்டத்தில் கைதியை அழைத்து செல்லும் போது போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.,களுக்கு வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கிகளை கையாள்வது குறித்து புத்தாக்க பயிற்சி வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய சப்டிவிஷன்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை எஸ்.ஐ., சேகர் பயிற்சி வழங்கி வருகிறார் என்றனர்.

