தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு குண்டாஸ்

 கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு குண்டாஸ்

 கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு குண்டாஸ்


ADDED : பிப் 10, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கோம்பையில் கொலை வழக்கில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோம்பையை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி ராஜ்குமார் 60. இவரது மகன் ஆனந்த் போலீஸ்காராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக மருமகளுடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஆனைமலைப்பட்டி வெள்ளகரடு அருகே ராஜ்குமார் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக இருந்ததால், கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர். வழக்கில் தொடர்புடைய சம்பந்தி முத்துராஜ் 46, கம்பம் புது பள்ளிவாசல் தெரு முகமது சிராஜூதின் 36, கூலிப்படையை சேர்ந்த மதுரை காமராஜபுரம் ராமர் 36, முனிசாலை கருணாமணி 39, துாத்துக்குடி முனியசாமி 36 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., சினேகப்பிரியா பரிந்துரை செய்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us