தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பரமசிவன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை

பரமசிவன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை

பரமசிவன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை


ADDED : நவ 15, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி: தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நேற்று புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 18 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இந்து அறநிலையத்துறை, நன் கொடையாளர்கள், ஊர் பொதுமக்கள் மூலம் கோயில் புனரமைப்பு, புதிய சிலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்ட கொடி மரத்தை நேற்று முன்தினம் போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து காமராஜர் பஜார், கட்டபொம்மன் சிலை, முந்தல் ரோடு வழியாக போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று அங்கு புதிய கொடிமரம் நடும் விழா பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி, தேனி பிரிவு ஆய்வாளர் தியாகராஜன், செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். கொடிமரம் நடும் விழாவை ஒட்டி சிவனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அன்னதான அறக்கட்டளைச் செயலாளர் பேச்சிமுத்து, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேதுராம், தொழிலதிபர்கள் பரமசிவம், நாகமணி, போடி சுப்பிரமணியர் கோயில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் அறக்கட்டளை, போடி பரமசிவன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us