/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
/
கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
ADDED : டிச 01, 2025 06:19 AM

பெரியகுளம்: 'டிட்வா' புயல் மழையால் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் சீதோஷ்ண நிலையை ரசித்து விட்டுச் சென்றனர்.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதி வட்டக்காணல், பாம்பார்புரம் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. வங்க கடலில் உருவான 'டிட்வா' புயலால் நேற்று முன்தினம் அருவிப் பகுதியில் காலை முதல் மதியம் வரை சாரல் மழையாக பெய்தது. திடீரென மாலை 4:00 மணிக்கு கனமழையாக பெய்ய துவங்கியது.
இதனால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரும்பிச் சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்னை, திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு, கும்பக்கரை அருவியில் குளித்து விட்டு செல்வது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு வந்தனர். குளிக்கத் தடை உள்ளதால் கும்பக்கரை அருவி சுற்றுப்புறம் சீதோஷ்ண நிலையை ரசித்து விட்டுச் சென்றனர்.-

