/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
/
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
ADDED : டிச 03, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்:மாவட்டத்தில் ஒரு மாதமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அக்.17 ல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுருளி அருவியில் சேதம் ஏற்பட்டது.
இதனால் இரண்டு வாரங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்து, சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், தண்ணீர் குறைந்தால் உடனே குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றார்

