ADDED : டிச 20, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்,:காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. பனி காலங்களில் ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை போக்கும் நிலவேம்பு சூரணம், காய்ச்சலை போக்கும் பைரவ மாத்திரைகள், சாந்த சந்திரோதய மாத்திரைகள், குழந்தைகளுக்கு பாலசஞ்சீவி மாத்திரைகள் மூட்டுவலி நிவாரண தைலங்கள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் மருந்துகளை பெற்றுச் சென்றனர். முகாமில் மருத்துவ அலுவலர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன், மருந்தாளுனர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர் பிரபு ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

