/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளிர் கால சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பயணிகள் வருகை
/
குளிர் கால சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பயணிகள் வருகை
குளிர் கால சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பயணிகள் வருகை
குளிர் கால சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பயணிகள் வருகை
ADDED : நவ 22, 2025 03:50 AM

மூணாறு: மூணாறில் குளிர் கால சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக வர துவங்கினர்.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகள் ஆகியவற்றில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுதும் பெரும் அளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆண்டு தோறும் குளிர் காலம் நவம்பவரில் துவங்கும் என்பதால், அந்த காலநிலையை அனுபவிக்க பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகள் வருவதுண்டு.
தற்போது குளிர் காலம் துவங்கிவிட்டபோதும் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால சீசனை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து பயணிகள் குழுக்களாக வரத் துவங்கியுள்ளனர்.
நாய் கடித்து காயம்: மூணாறு அருகே ஆனச்சாலில் நாய் கடித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். மூணாறு அருகே ஆனச்சால் பகுதியில் ஆடிட் ஜங்ஷனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். அவர், அப்பகுதியில் நேற்று முன்தினம் நடை பயிற்சி சென்றபோது நாய் கடித்து பலத்த காயம் அடைந்தார். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை பெற்றார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

